வழக்கமான கிரெடிட் கார்டுகளுக்கும் உழவர் கடன் அட்டைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன
விவசாயிகளுக்கான கடன் அட்டை, விவசாயிகளுக்கு மட்டுமான பிரத்யேகமான கிரெடிட் கார்டு திட்டம் ஆகும்
விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் விவசாயி கடன் அட்டைத் திட்டம், விபத்துக் காப்பீடும் வழங்குகிறது.
விவசாயிகளுக்கு பொருளாதார உதவிகளை செய்வதற்காகவும், அவர்கள் கடன் வாங்கி கஷ்டப்படாமல் இருப்பதற்காகவும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம்
மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து மத்திய அரசு நடத்தும் திட்டம் இது
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு அல்லது பிராந்திய வங்கிகளில், கிசான் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் விவசாயியின் நிலம், பயிர் முறை, வருமானம் ஆகியவை பரிசோதிக்கப்படும், பொதுத்துறை வங்கிகளின் கடன் அட்டை விதிமுறைகள் பொருந்தும், விவசாயக்கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும்
விவசாய இடுபொருட்களை வாங்க உதவும் இந்த கடன் அட்டையில் இருந்து பெறும் கடன்களை அறுவடை முடிந்த பிறகு செலுத்தினால் போதும், விவசாய வருமானத்தின் அடிப்படையில் கடன் வசதி கிடைக்கும்