தங்கத்தை அடமானம் வைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
தங்கம் என்பது பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது. அவசர தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டில் ஒரு பவுன் நகை இருந்தால் கூட அதனை வங்கியில் வைத்து தேவையான கடனை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால், தங்கத்தை எப்போது அடமானம் வைத்தாலும் ஒரு விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தங்கத்தை அடமானம் வைக்க எடுத்துச் செல்வதற்கு முன்பாக, அடமானம் வைக்கும் நகைகளை போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக என்னென்ன நகையை அடமானம் வைக்கிறோம்? என்பதைத் தனியாக எழுதி வையுங்கள். மேலும் நகைகளை எடை போட்டு அதையும் குறித்துக்கொள்ளுங்கள்.
நகைகளை அடைமானம் வைத்த பிறகு கொடுக்கப்படும் ரசீதில், நகைகள் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்களா? என்பதைச் சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
நகைகளை மீட்கும்போது ரசீதில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து நகைகளும் இருக்கின்றதா? என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
தங்கத்தை மீட்கும்போது எடையையும் சரி பார்த்துக்கொள்வது அவசியம்.