OPS, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme) கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வயது அடிப்படையில் இந்த அதிகரிப்பு இருக்கும்.
80 முதல் 85 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 20% உயர்வு கிடைக்கும்.
85 முதல் 90 வயது வரை உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 30% உயர்வு கிடைக்கும்.
90 முதல் 95 வயது வரை உள்ள பணியாளர்களுக்கு 40% உயர்வு கிடைக்கும்.
95 முதல் 100 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 50% உயர்வு கிடைக்கும்.
100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 100% உயர்வு வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெறுபவர் குறிப்பிட்ட வயதை அடையும் மாதத்தின் முதல் நாளிலிருந்து இந்த பலன்கள் தொடங்கும்.ஓய்வூதியம் விநியோகிக்கும் அனைத்து அமைப்புகள் மற்றும் அமைச்சகங்களும் இந்த வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும்.
இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக எழுதப்படுள்ளது. மேலும் விவரங்களுக்கு, ஓய்வுபெற்ற ஊழியர்கள், தொடர்புடைய ஓய்வூதியம் வழங்கும் துறைகளைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.