தங்கத்தின் விலை உலக சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது, தற்போது மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாகியுள்ளது
திருமண சீசன் உச்சம் மற்றும் சர்வதேச அளவில் உலோகத்தின் விலை உயர்வு ஆகியவற்றால் இந்தியாவில் தங்கத்தின் விலை, தனது வாழ்நாளின் அதிகபட்ச உச்சத்தைத் தொட்டுள்ளது
டிசம்பர் 2ம் தேதி காலை வர்த்தகத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.64,530 என்ற அளவுக்கு உயர்ந்தது, அதாவது கிராம் ஒன்றுக்கு 6,453 ரூபாயாக தங்கத்தில் விலை விற்பனையானது
மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.63,760 ஆக இருந்தது, இது முந்தைய நாளை விட ரூ.810 அதிகமாகும்
1.6 சதவீதம் அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு 2,069.10 டாலராக உயர்ந்ததால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையும் ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்தியா அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்கிறது மற்றும் உலக விலை உயர்வு உள்நாட்டு சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
முக்கிய கரன்சிகளுக்கு எதிராக டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது,
பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்துடன் ஒப்பிடும்போது, வங்கிகள் அளிக்கும் குறைந்த வட்டி விகிதங்கங்களின் தாக்கத்தால், சர்வதேச அளவில் தங்கத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், தரவுகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை