EPF இல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை வட்டியாக கிடைக்கும். தற்போது பிஎஃப் சந்தாதாரர்களுக்கு 8.15% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கிறது.
இதில் 2 பகுதிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஒன்று EPF, மற்றொன்று EPS. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் இதன் மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை (Pension) 1,000 ரூபாய் கிடைக்கும்.
உங்கள் EPF கணக்கிற்கு நீங்கள் யாரை வேண்டுமானாலும் நாமினி ஆக்கலாம். சந்தாதாரர் இறந்தால், நாமினிக்கு பிஎஃப் பணம் கிடைக்கும்.
தன்னார்வ வருங்கால வைப்பு நிதியிலும் அதாவது VPF -இலும் (Voluntary Provident Fund) கூடுதல் பங்களிப்பு மூலம் ஊழியர்கள் முதலீடு செய்யலாம்.
EPF -இல் இருந்து பணம் எடுக்க (EPF Withdrawal) பல விதிகள் உள்ளன. இவற்றின் கீழ் வாழ்க்கையின் முக்கிய தேவைகளின் போது பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இது தவிர, பகுதியளவு தொகையை எடுப்பதற்கு (EPF Withdrawal) அதற்கான தனித்துவமான விதிகள் உள்ளன. இதுவும் சந்தாதாரர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
ஒரு நிறுவனத்தில் ஆயுள் காப்பீட்டுப் பலன் இல்லை என்றால், அதன் ஊழியர்களுக்கு EDLI (ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு) திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீடு வழங்கப்படலாம்.