ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்து அவரது வயது 58 ஆக இருந்தால், அவர் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. பணியாளர் விரும்பினால், அவர் தனது ஓய்வூதியத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் பெறலாம்.
பணியாளர் விரும்பினால், அவர் 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். எனினும், ஒரு ஊழியரின் வயது 50 -க்கு மேல் இருந்தால் மட்டுமே அவர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றால் (நிரந்தர அல்லது தற்காலிகமாக) ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார்.
இறந்த EPFO உறுப்பினரின் வாழ்க்கைத் துணைக்கும் இறந்த EPFO உறுப்பினரின் இரண்டு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் இந்த ஓய்வூதியம் கிடைக்கிறது.
ஊழியர் இறந்து, அவருக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்றாலோ, அல்லது, அவரும் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தலோ, ஊழியரின் குழந்தைகளுக்கு 25 வயது முடியும் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
EPF உறுப்பினர் தனது மரணத்திற்கு பிறகு ஓய்வூதியம் பெற யாரையாவது நாமினியாக பரிந்துரைத்திருந்தால், அந்த நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
இபிஎஃப் உறுப்பினர் இறந்து, குடும்ப உறுப்பினர்களும் (மனைவி, குழந்தைகள்), நாமினியும் இல்லாத நிலையில், சார்ந்திருக்கும் பெற்றோருக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. EPF குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.