வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு ஏதாவது விதி உள்ளதா? எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் இலவசமாக எடுக்க முடியுமா?
வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) 194N பிரிவின் கீழ், ஒரு நபர் ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால், டிடிஎஸ் (TDS) செலுத்த வேண்டும்.
ஆனால், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யாதவர்களுக்குதான் இந்த விதி
தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்கள் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் இருந்து ரூ.20 லட்சத்திற்கு மேல் எடுத்தால் TDS கண்டிப்பாக செலுத்த வேண்டும்.
ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு, தபால் அலுவலக கணக்கு அலது கூட்டுறவு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நிதியாண்டில் TDS செலுத்தாமல் ரூ.1 கோடி வரை ரொக்கமாக எடுக்கலாம்.
ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால், 2 சதவீத TDS விதிக்கப்படும்.
மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்யாத நபர்கள், ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீத TDS கட்ட வேண்டும்.
மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்யாத நபர்கள், ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால் 5 சதவீத கட்ட வேண்டும்.