எண்டிஏ அரசாங்கம் ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இம்முறை அரசாங்கம் சில குறிப்பிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடும்.
நடுத்தர வர்க்கம், சம்பள வர்க்கம் ஆகியவர்களுக்கான சில சிறப்பு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பை அதிகரிக்க உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (PLI) நோக்கத்தை அரசாங்கம் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் (MSMEs) ஊக்குவிக்கப்படும். பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வரி விலக்கு மட்டுமல்ல, வீட்டுக் கடன்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கான வட்டி விகிதங்களிலும் சலுகைகள் கிடைக்கலாம் என கூறப்படுகின்றது.
வரி அடுக்குகளிலும் மாற்றங்கள் இருக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
விவசாயிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அவர்களது செலவினங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றான.