மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள்
அகவிலைப்படி உயர்வுடன் ஜூலை 2023 முதலான டிஏ ஹைக் அரியர் தொகையும் ஊழியர்களுக்கு விரைவில் கிடைக்கும்.
அகவிலைப்படி 3% உயர்த்தப்படும் என ஒரு சாராரும் 4% என மற்றொரு சாராரும் கூறி வருகிறார்கள். இன்னும் இது குறித்த தெளிவு கிடைக்கவில்லை.
ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்களின் படி அகவிலைப்படி 46 சதவீதத்தை தாண்டியுள்ளது, அதாவது இதில் 4 சதவீதம் உயர்வு இருக்கும் என கருதலாம்.
இதற்கான தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும், அக்டோபர் நடுப்பகுதிக்குள் அமைச்சரவையில் அரசு ஒப்புதல் அளிக்கலாம்.
4% டிஏ ஹைக் கிடைத்தால், குறைந்தபட்ச சம்பளத்தில் (ரூ. 18,000), மொத்த ஊதிய உயர்வு ரூ. 8,640 ஆக இருக்கும்.
4% டிஏ ஹைக் கிடைத்தால், அதிகபட்ச சம்பளத்தில் (ரூ 56,900), மொத்த ஊதிய உயர்வு ரூ. 27,312 ஆக இருக்கும்.
ஒரு ஆண்டில் இரு முறை (ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில்) ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது.