மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவிலைப்படி அதிகரிப்புக்காக மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
புது தில்லி ஜி20 உச்சி மாநாடு 2023 செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த பிறகு டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனவரி 2023 ல் நான்கு சதவீத உயர்வுக்குப் பிறகு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) தற்போது 42 சதவீதமாக உள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணான ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் படி ஜூலை 2023 முதலான டிஏ ஹைக் 3 அல்லது 4 சதவுகிதம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால் மொத்த டிஏ 45% ஆகவும், 4 சதவிகிதம் அதிகரித்தால் டிஏ 46% ஆகவும் அதிகரிக்கும்.
சில்லறை பணவீக்க தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
ஜூலை, 2023க்கான அகில இந்திய ஏஐசிபிஐ CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 ஆக உள்ளது.
குறைந்தபட்ச அடிப்படை சம்பள கணக்கீட்டின் படி (ரூ 18,000), டிஏ 46% அதிகரித்தால், ஆண்டு ஊதிய உயர்வு ரூ. 8640 ஆக இருக்கும்.
அதிகபட்ச அடிப்படை சம்பள கணக்கீட்டின் படி (ரூ 56,900), டிஏ 46% அதிகரித்தால், ஆண்டு ஊதிய உயர்வு ரூ. 27312 ஆக இருக்கும்.