பல்வேறு தனிநபர் கடன் செயலிகள் ஆன்லைனில் வந்துவிட்டதால், கடன் வேண்டுமானால் அது சுலபமாக கிடைத்துவிடுகிறது
எளிமையாக கிடைத்தாலும், இந்த கடன்களில் பல ஆபத்துகள் இருக்கின்றன. அதைப் பற்றி அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
சில நிமிடங்களில் கடனைத் தருவதாக வாக்குறுதியளிக்கும் செயலி அடிப்படையிலான கடன்கள், பணம் தேவைப்படும் நபர்களை கவர்ந்திழுக்கின்றன
எந்தவிதமான ஆவணங்களோ ஏன் விண்ணப்பப் படிவம் கூட தேவையில்லை என்று இருப்பதால், அவசரத் தேவைக்காக இந்த செயலிகளில் கடன் வாங்கத் தோன்றும்
யாரை குறிவைக்கின்றன தெரியுமா? மாணவர்கள் மற்றும் பணம் தேவைப்படும் வேலையில்லாதவர்களை குறிவைக்கின்றன.
ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை இந்த உடனடி கடன் தரும் செயலிகள் பின்பற்றுவதில்லை
கொடுத்த கடனைத் திரும்பப் பெற அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் மிகக் கடுமையான, நெறிமுறையற்றவைகளாக இருக்கும்
அதிகப்படியான வட்டி மற்றும் அபராதம், கடனுக்கான வட்டியை கழித்துவிட்டு எஞ்சியத் தொகையைத் தருவது
தனிநபர் கடனை அணுகுவதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யும் போது, பல முறை செயலிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். மொபைலில் உள்ள தொடர்பு எண்கள், படங்கள் போன்றவற்றை அணுகும் அனுமதியையும் தர வேண்டியிருக்கும், இதனால் பாதுகாப்பு குறையும்