அரசு மற்றும் வங்கிகள் வழங்கும் மூத்த குடிமக்களுக்கான பலவித முதலீட்டு திட்டங்கள் வருமானத்தை அள்ளி வழங்குகின்றன.
2017 ஆம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. LIC மூலமாக ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் குடிமக்களுக்கு SCSS என்னும் சேமிப்பு திட்டம் வரப்பிரசாதம் எனலாம்.
அஞ்சலக மாத வருமான திட்டத்தின் கீழ் ஓய்வு காலத்தை மிக பாதுகாப்பாக சந்தோஷமாக கழிக்கலாம்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் நிலையான வைப்பு நிதிக்கு அதிக வட்டிகள் வழங்குகின்றன.
டெப்ட் அல்லது ஈக்குவிட்டி பிரிவில் பலவிதமான பரஸ்பர நிதிய முதலீடுகள் சிறந்த வருமானத்தை கொடுக்கின்றன
முதலீட்டு நிபுணர்களின் ஆலோசனைப்படி, மேலே குறிப்பிட்டுள்ள முதலீட்டு திட்டங்களில் ஒன்றில் உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்து, நிம்மதியாக வாழலாம்.