எவ்வளவு சம்பாதித்தாலும், சில நேரங்களில் திடீரென ஏற்படும் செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது
தேவைப்படும்போது செலவுகள் செய்வதற்காகத் தான் நாம் சம்பாதிக்கும் பணத்தை பல வழிகளில் சேமிக்கிறோம். இருந்தாலும், சேமிப்பு பற்றாக்குறையாக இருந்தால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதில் உடனடியாக கைக்கொடுப்பது தங்கம் தான்
தங்கத்தை வாங்கும் விருப்பம் பெண்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உண்டு. சிலருக்கு அது முதலீடு சிலருக்கு பாரம்பரிய காரணங்கள் என்றால், பலருக்கு அது அழகை அதிகரிக்கும் ஆபரணம்
தங்கக் கடன் வாங்கும்போது அது எத்தனை கிராம் என்பது மட்டுமல்ல, எவ்வளவு கேரட் கொண்டது என்பதற்கு ஏற்றாற்போலத் தான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.
சுத்தத் தங்கம் 24 காரட் என்பதால் அதில் நகை செய்ய முடியாது. எனவே ஆபரணங்கள் 22 கேரட் முதல் 14 கேரட் வரையிலான பியூரிட்டியில் செய்யப்படுகின்றன
ஆபரணங்களின் மீது கடன் வாங்கும்போது, அது சுலபமாக கிடைத்துவிடும் ஏனென்றால் அடமானத்தின் பேரில் கொடுக்கப்படும் கடன் என்பது தான்
கல் பதித்த நகைகளுக்கு குறைவான கடன் தான் கிடைக்கும். ஏனென்றால், அதன் பியூரிட்டி எவ்வளவு என்று பார்த்தால் அது குறைவாகவே இருக்கும் என்பதும் கல் பதித்த நகைகளில் கல்லின் எடையும் சேர்ந்திருக்கும் என்பதால் கடன் குறைவாகவே கிடைக்கும்