ஊழியர்கள் நிதி அமைச்சகத்திடம் ஆறு அம்சங்கள் அடங்கிய பட்ஜெட்டுக்கான தங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
இதில் 8வது ஊதியக் குழுவிற்கான உருவாக்கம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய குழுக்களுக்கான பரிந்துரைகள் அமல்படுத்தப்படுகின்றன.
7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு எட்டாவது ஊதியக் குழு அமலுக்கு வர வேண்டுமானால் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வரவேண்டும்.
8வது ஊதியக்குழு அறிமுகம் செய்யப்பட்டால் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தற்போதுள்ள 2.57-ல் இருந்து 3.68 ஆக அதிகரிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபிட்மண்ட் ஃபேக்டர் அடிப்படை சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான முக்கியமான காரணியாக கருதப்படுகிறது.
ஃபிட்மன்ட் ஃபேக்டரில் அதிகரிப்பு ஏற்பட்டால் அது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும்.
இது தவிர 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்த பிறகு அகவிலைப்படி (DA), பயணக் கொடுப்பனவு (TA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) போன்ற பலவித அலவன்சுகளில் பலவித ஏற்றம் ஏற்படும்.
அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய பலனை அளிக்கக்கூடிய எட்டாவது ஊதிய குழு பற்றி இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று வெகுவாக நம்பப்படுகின்றது.
இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.