மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கின்றது.
விரைவிலேயே ஊழியர்களுக்கு 8வது ஊதியக்கமிஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.
ஜூன் இறுதிக்கும் புதிய அரசாங்கம் 8வது ஊதியக்கமிஷன் பற்றி முடிவெடுக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது அறிமுகம் செய்யப்பட்டால் அது அமலுக்கு வர குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும்
இதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும் என கூறப்படுகின்றது. ஊதிய கணக்கீட்டில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது.
8வது ஊதுயக்கமிஷனில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.86 மடங்காக உயர்த்தப்படக்கூடும், இதனால் அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.
3.68 மடங்காக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால் ஊதியம் 44.44% அதிகரிக்கும்.