இந்தியா போஸ்ட் பல வித முதலீட்டு திட்டங்களை கொண்டுள்ளது.
இவற்றால், சேமிப்பு, வருமான வரிச் சலுகைகள் என்ற இரு பெரிய நன்மைகள் கிடைக்கின்றன.
இந்தியா போஸ்ட் அளிக்கும் மிகச்சிறந்த சேமிப்பு திட்டங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிபிஎஃப் 7.1% வருடாந்திர கூட்டு வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதற்கு வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (டிடி) திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் 5 ஆண்டு டிடியின் கீழ் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் விலக்கு பெறலாம்.
SSY என்பது பெண் குழந்தைகளின் நலனுக்கான சிறு சேமிப்பு திட்டமாகும். வரி செலுத்துவோர் நிதிச் சேமிப்புடன் கூடுதலாக 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் விலக்கு பெறலாம்
NSC என்பது இந்திய அஞ்சல் மூலம் வழங்கப்படும் நிலையான வருமான முதலீட்டுத் திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் பிரிவு 80C இன் கீழ் ரூ.1.50 வரை வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் விலக்கு கோர அனுமதிக்கப்படுகின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ், தங்கள் முதலீடுகளுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் விலக்கு கோரலாம்.