2000 ரூபாய் நோட்டு குறித்து RBI முக்கிய அறிவிப்பு

2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படும் என அறிவித்தது.

Shiva Murugesan
May 30,2023
';

ரூ. 2000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் எவ்வளவு?

தங்களிடம் உள்ள 2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யலாம் அல்லது மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

';

ஒரு நேரத்தில் எத்தனை நோட்டுகளை மாற்றலாம்

ஒரே நேரத்தில் பத்து 2 ஆயிரம் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம்.

';

ரூ. 2 ஆயிரத்துக்கு ஈடாக குறைந்த மதிப்புடைய நோட்டுகள் வழங்கப்படும்.

உங்களிடம் இருக்கும் 2000 நோட்டுகளை வங்கிகள் வாங்கிக்கொண்ட பிறகு, அந்த தொகைக்கு ஈடாக ரூ.500, ரூ.200, ரூ.100 போன்ற குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும்.

';

ரூ. 2000 டெபாசிட் செய்தால் பரிமாற்றக் கட்டணம் செலுத்த வேண்டுமா?

அனைத்து வணிக வங்கிக் கிளைகளிலும் மற்றும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) 2000 ரூபாய் நோட்டுகளை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.

';

செல்லுபடியாகும் காலம்

ரூ 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை செல்லும். ஆனால் அவை புழக்கத்தில் இருக்காது.

';

ரூ. 2000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்

2019ம் ஆண்டு முதலே 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

';

க்ளீன் நோட் பாலிசி கொள்கை

க்ளீன் நோட் பாலிசி கொள்கையின் கீழ் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

';

89% காலாவதியானது

2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 89 சதவீதம் மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டது மற்றும் அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story