உங்கள் செல்ல மகளுக்கான சிறப்பான எதிர்காலம்; முழு விவரம் இதோ

சுகன்யா சம்ரித்தி யோஜனா: சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ், 10 வயது அல்லது அதற்கும் குறைவான உங்கள் பெண் குழந்தைக்கு நீங்கள் கணக்கைத் திறக்கலாம். இந்தக் கணக்கை நீங்கள் எந்த வங்கியிலும் அல்லது தபால் நிலையத்திலும் சென்று தொடங்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 27, 2022, 10:15 AM IST
  • முதலீட்டு குறிப்புகள்
  • சுகன்யா சம்ரித்தி யோஜனா விவரங்கள்
  • திட்டத்தின் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் செல்ல மகளுக்கான சிறப்பான எதிர்காலம்; முழு விவரம் இதோ title=

சுகன்யா சம்ரித்தி யோஜனா: மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பெண் குழந்தை பிறந்தது முதல் படிப்பு, திருமணம் வரை பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டங்களின் நோக்கம், மகள்கள் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கான முழு வாய்ப்புகளைப் பெறுவதும், அவர்கள் தன்னிறைவு பெறுவதும் ஆகும். இன்று நாங்கள் உங்களுக்கு மோடி அரசாங்கத்தின் மிகவும் லட்சிய திட்டம் பற்றிய தகவலை வழங்க உள்ளோம். இது ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும், இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம். அதன்படி இந்தத் திட்டத்தின் பெயர் சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகும். நாட்டின் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே உங்களின் பெண் குழந்தையின் படிப்பு மற்றும் திருமணச் செலவுகளின் டென்ஷனில் இருந்து விடுபட விரும்பினால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் வெறும் 250 ரூபாயில் முதலீடு செய்யத் தொடங்கலாம்
உங்கள் பெண் குழந்தையின் 10 வயது அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் இந்த கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கை நீங்கள் எந்த வங்கியிலும் அல்லது தபால் நிலையத்திலும் சென்று தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ஒரு வருடத்தில் ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மெச்சூரிட்டியடைந்தவுடன், பெண் குழந்தை மட்டுமே கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுக்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ், அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்குக் கணக்குத் தொடங்கலாம். இரண்டாவது முறையாக உங்களுக்கு இரண்டு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால், மூன்று பெண் குழந்தைகளுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு தொடங்கலாம்.

மேலும் படிக்க | உசார் மக்களே! அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை!

இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதத்தைப் பற்றி பேசினால், ஆண்டு அடிப்படையில் 7.6% வட்டி விகிதம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதம்) கிடைக்கும். ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் 14 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.22.50 லட்சமாக இருக்கும். இதற்குப் பிறகு, பெண் குழந்தைக்கு 21 வயது ஆன பிறகு, உங்களுக்கு மொத்தம் ரூ.63.65 லட்சம் கிடைக்கும், இது உங்கள் முதலீட்டுத் தொகையின் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். எனவே 41.15 லட்சம் மொத்த வட்டியின் பலனைப் பெறுவீர்கள்.

திட்டத்தின் மெச்சூரிட்டி காலம்
உங்களின் பெண் குழந்தையின் 21 வயதில் இந்தக் கணக்கின் மெச்சூரிட்டி காலம் ஆகும், இதில் நீங்கள் அதிகபட்சம் 14 ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில், டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகைக்கு அரசு வட்டி சேர்த்துக் கொண்டே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் மூன்று மடங்கு வரை பலன்களைப் பெறலாம். அதன்படி இந்தத் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைக்கு 18 வயதாகும்போது 50% தொகையையும், 21 வயதில் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.

வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது
இந்த நிலையில் ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு மதிப்பாய்வு செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில், செப்டம்பர் 2022 உடன் முடிவடையும் காலாண்டிற்கு முன், இந்த திட்டங்களின் வட்டி விகிதங்களை அதிகரிக்க நிதி அமைச்சகம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் 0.50% முதல் 0.75% வரை வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம். தற்போது, ​​இந்த திட்டத்தில் 7.6% வட்டி வழங்கப்படுகிறது, இது 8.30% ஆக அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன் ஊழியர்களுக்கு ஷாக்! இந்த விதியை மாற்றியது அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News