குட் நியூஸ்: EPF Claim விதிகளில் மாற்றம், இனி பிஎஃப் பணத்துடன் அதிக வட்டி கிடைக்கும்

EPFO New Rules: EPFO இன் புதிய விதிகளின்படி, இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அவர்களின் க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டித் தொகையைப் பெறுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2024, 02:34 PM IST
  • இபிஎஃப் க்ளெய்ம் விதிகளில் மாற்றம்.
  • க்ளெய்ம் செட்டில்மென்ட் ஆகும் வரை வட்டி கிடைக்கும்.
  • புதிய விதிகள் எப்போது அமல்படுத்தப்படும்?
குட் நியூஸ்: EPF Claim விதிகளில் மாற்றம், இனி பிஎஃப் பணத்துடன் அதிக வட்டி கிடைக்கும் title=

EPFO New Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி கிடைத்துள்ளது. க்ளெய்ம் செட்டில்மெண்ட் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO ​​விதிகளை மாற்றியுள்ளது. இதனால் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நன்மை ஏற்படும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Central Board of Trustees சந்திப்பில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது

EPFO இன் புதிய விதிகளின்படி, இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அவர்களின் க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டித் தொகையைப் பெறுவார்கள். இது அவர்களுக்கு அதிக நிதிப் பலன்களை அளிக்கும். மேலும் க்ளைம் செயல்முறையும் இதனால் இனி வேகமாக நடக்கும். 30 நவம்பர் 2024 அன்று நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில் இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

EPF Subscribers: க்ளெய்ம் செட்டில்மென்ட் ஆகும் வரை வட்டி கிடைக்கும்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, “1952 EPF திட்டத்தின் பத்தி 60(2)(b) இல் முக்கியமான திருத்தத்தை CBT அங்கீகரித்துள்ளது. முந்தைய விதிகளின்படி, இபிஎஃப் சந்தாதாரர்களின் க்ளெய்ம் கோரிக்கை மாதத்தின் 24 ஆம் தேதிக்குள் தீர்க்கப்பட்டால், முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி செலுத்தப்பட்டது. இப்போது, ​​க்ளைம் செட்டில்மென்ட் தேதி வரை உறுப்பினர்களுக்கு வட்டியின் பலன் கிடைக்கும். இது அவர்களுக்கு அதிக நிதிப் பலனைக் கொடுக்கும். மேலும் செட்டில்மென்ட் செயல்முறையும் இதன் காரணமாக வேகமாக இருக்கும்." என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஜாக்பாட்: பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் தொகை? எவ்வளவு கிடைக்கும்?

EPFO Claim Settlement: புதிய விதிகள் எப்போது அமல்படுத்தப்படும்?

புதிய விதிகளை அமல்படுத்த இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆகையால், அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு வரும் வரை, பழைய விதிகளின் படியே க்ளெய்ம்கள் செட்டில் செய்யப்படும்.

புதிய விதியால் என்ன பலன் கிடைக்கும்?

முன்மொழியப்பட்ட இபிஎஃப் க்ளெய்ம் (EPF Claim) விதிகள் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.

- நிதி நன்மைகள் அதிகரிக்கும்: EPF உறுப்பினர்கள் க்ளைம் செட்டில்மென்ட் வரை முழு காலத்திற்கும் வட்டியைப் பெறுவார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

- புகார்கள் குறையும்: வட்டி கணக்கீட்டில் உள்ள வேறுபாட்டை நீக்குவதன் மூலம், உறுப்பினர்கள் வட்டி இழப்பு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறையும்.

- க்ளெய்ம் செட்டில் செய்யப்படும் செயல்முறை வேகமெடுக்கும்: புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒரு மாதத்திற்குள் க்ளெய்ம்கள் செட்டில் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்கும். 

- உகந்த வளப் பயன்பாடு: EPFO ​​ஆனது கிளெய்ம்களை மிகவும் திறமையாகச் செயல்படுத்த முடியும். இது சிறந்த சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அவ்வப்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்கின்றது. பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கின்றது. இபிஎஃப் உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு அதிர்ச்சி: இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது... விதியில் அரசு செய்த மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News