ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் மிகப்பெரிய மாற்றம்: மாநில அரசு பெரிய அளவில் தற்போது ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் கீழ் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களின் ஓய்வு பெறும் வயது நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இதனுடன் நிதியுதவியும் வழங்கப்படும்.
ஓய்வு பெறும் வயதை 4 ஆண்டுகள் அதிகரிப்பு
இந்நிலையில் தெலுங்கானா அரசு அங்கன்வாடிகளில் பணிபுரியும் அலுவலக ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தியுள்ளது. முன்னதாக அங்கன்வாடி ஆசிரியர்கள் உள்ளிட்ட உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 61 ஆக இருந்த நிலையில் இது தற்போது 65 வயதாக (Retirement Age) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஓய்வு பெறும் அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு உதவியாளர்கள், அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிதி உதவியும் வழங்கப்படும்
இதுமட்டுமின்றி, 3989 மினி அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும், அத்துடன் ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ஆஸ்ரா ஓய்வூதியம் வழங்கப்படும். தற்போது தெலுங்கானா மாநில முதல்வரின் இந்த அறிவிப்புடன், முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கு நன்றி தெரிவித்துள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோர், தெலுங்கானா உருவானதில் இருந்து அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களின் ஓய்வு பெறும் (Retirement Age Hike) வயதை 65 ஆக உயர்த்தியதற்கு எம்எல்சி கவிதாவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முன்னதாக எம்எல்சி கவிதாவை அங்கன்வாடி ஆசிரியர் சங்க மாநில தலைவர் பரலட்சுமி மற்றும் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இதன் போது அவர் முதலமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மினி சென்டர்களை பிரதான அங்கன்வாடி மையமாக தரம் உயர்த்த உத்தரவு
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 35700 அங்கன்வாடிகள் உள்ளன, அவற்றில் 31711 முக்கிய அங்கன்வாடிகள் மற்றும் 3989 மினி அங்கன்வாடிகள் (Mini-Anganwadi) உள்ளது. தற்போதுள்ள மினி சென்டர்களை பிரதான அங்கன்வாடி மையங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தெலுங்கானாவில் அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ரூ.13650, மினி அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ரூ.7800 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.7800 ஊதியம் வழங்கப்படுகிறது.
எல்ஐசி ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு
இதற்கிடையில் அரசு ஊழியர்களின் (Government Employees) பல்வேறு பிரிவினரின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்படும் நிலையில், வங்கிகள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கும் (LIC Employees) ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசி தலைவர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவிலும் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்
பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களின் சில பிரிவினருக்கு ஓய்வு பெறும் வயதானது அதிகரித்துள்ளது. அதன்படி ஆந்திர பிரதேச அரசும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியுள்ளது. அந்த வகையில் தற்போது ஆந்திர அரசு ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் உயர்த்தியது. இதற்கான உத்தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆந்திரப் பிரதேசத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது நடைமுறையில் வரும் என்றும், இதனால் அவர்களுக்கு அதி பலன்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ